யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை அதிபர் தயானந்தன் நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9ஆம் திகதி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது அவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில், ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப் பட்டிருந்த அவா் திடீரென உயிரிழந்துள்ளார். இதேவேளை, யாழ்.குடாநாட்டில் 50 ஆயிரம் பேருக்கு 2 கட்டங்களாக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
அதேபோல அடுத்த 50 ஆயிரம் பேருக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் தடுப்பூசி போட்டவர்களிடையே ஆபத்தான சம்பவங்கள் எவையும் பதிவாகவில்லை என சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.
மேலும் நோய் பாதிப்புகள் இருப்போர் தமது நோய் நிலை குறித்து மருத்துவர்களுக்கு தெரியப்படுத்தி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதால் பாதிப்புகளை முற்றாகத் தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவா்கள் கூறினர்.