யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவில் சுமாா் 800 இலட்சம் ரூபா பெறுமதியான தனது வீட்டினை நற்கருமங்களுக்காக, சிவபூமி அறக்கட்டளைக்கு ஒரு பொிய மனம் படைத்த மனிதா் வழங்கியுள்ளதாக செஞ்சொற்செல்வா் ஆறு திருமுருகன் கூறியுள்ளார் .
யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவிலே மிகவும் புகழ்பூத்த செனட்டா் SR கனகநாயகம் அவா்களின் சட்ட அலுவலகம் நடைபெற்ற வீடு, உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக முழுமையாக அழிவடைந்து விட்டது.
அதன் பின்னா் அவருடைய மகள் வைத்தியா் பாலசுப்பிரமணியம் தம்பதியினா் இந்த வீட்டினை மிகவும் அழகாக கட்டினார்கள். அந்த வீட்டினை ஒரு பாராள மண்ற உறுப்பினர் வாடகைக்கு இருந்தார்.
நான் சென்ற மே மாதம் அவுஸ்ரேலியாவிற்கு சென்ற சமயத்திலே வைத்தியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் என்னை அழைத்து எங்களது அப்பா சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவராக சிறப்பாக பணியாற்றியவர். சங்கரத்தையிலே எங்களது அப்பா எல்லா செல்வத்தோடும் இருந்தவர்.
பிள்ளைகளை நன்றாக வைத்திருக்கிறார். எங்கட தம்பிதான் ஜனாதிபதி சட்டத்தரனி கனகேஸ்வரன் அவரும் ஒரு குறைவின்றி வாழ்ந்து வருகின்றார். ஆறுதிருமுருகனுக்கு எங்கட யாழ்ப்பாணத்து வீட்டினை நன்கொடையாக கொடுப்பதென்று நாங்களும் பிள்ளைகளும் முடிவெடுத்திருக்கின்றோம்.
உங்களுடைய சம்மதத்தைப் பெற்று விட்டு திருமதி நீலகண்டனுக்கு காணி உறுதியை ஒப்படைக்கின்றோம் அவர்கள் உங்களுக்கு உறுதியை மாற்றி எழுதித் தருவார்கள் என அன்பாக தெரிவித்தார்கள்.
கனகேஸ்வரன் கொழும்பில் புகழ்பெற்ற சட்டத்தரணியாக பணியாற்றிவருகின்றார். நான் இலங்கைக்கு வருகை தந்ததும் அவருடன் தொலைபேசில் தொடர்பு கொண்டு உங்களுடைய அக்கா யாழ்ப்பாணத்து வீட்டினை எங்களுக்கு தருவதற்கு விரும்பம் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு சேர வேண்டிய சொத்து உங்களுக்கு சம்மதம் என்றால் நாங்கள் பெற்றுக் கொள்கின்றோம் என தெரிவித்தேன். அதற்கு அவர் எங்கட அக்கா எல்லாம் சரியாகத்தான் சொல்லுவார் அவர் சொன்னால் எனக்கு எந்த மறுப்பும் இல்லை என பதில் தெரிவித்தார்.
இந்த வீட்டினை நாங்கள் பொறுப்பெடுத்து அதனை யாழ் மருத்துவமனைக்கு எதிர்வரும் 21ம் திகதி ஒப்படைக்கவுள்ளோம். எங்கள் யாழ்ப்பாணத்தில் குழந்தை செல்வம் பெற்றுக் கொள்ள இடர்களை எதிர்நோக்கியுள்ள எமது சகோதரிகளின் நன்மைக்காக கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் அமைக்க யாழ் வைத்தியசாலைக்கு பெருமையுடன் நாங்கள் ஒப்படைக்கின்றோம்.
யாழ்ப்பாண வைத்தியசாலையும் சிவபூமியும் இணைந்து பெண்களுக்கான கரு வளர்ச்சி சிகிச்சையினை இலவசமாக வழங்கவுள்ளோம். எங்களுக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு நிலத்தினையும் இது போன்ற தர்ம காரியங்களுக்குதான் நாங்கள் பயன்படுத்துகின்றோம். இந் வீட்டினை வழங்கியவர்களுக்கு நான், நீங்கள் தந்த வீட்டினை நாங்கள் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கரு வளர்ச்சி சிகிச்சை நிலையத்திற்கு வழங்கவுள்ளோம் .
உங்கள் கருத்து என்ன என்று கேட்டேன்… அதற்கு அவர்கள் ஆறுதிருமுருகன் உங்களுக்கு நாங்கள் வீட்டினைத் தந்துவிட்டோம் இனி உங்கட முடிவுதான் எங்களிடம் ஒன்றும் கேட்க வேண்டாம் என தெவித்தார்கள். தற்காலத்தில் இப்படியும் மனிதர்கள் வாழ்கின்றார்கள் என நினைக்கும் போது எவ்வளவு பெருமையாக உள்ளது.
11 அறைகள் 6 மலசல கூட வசதிகளுடன் நாங்கள் இந்த வீட்டினை யாழ் மக்களின் குழந்தை செல்வத்திற்காக மிகவும் மகிழ்வுடன் வழங்குகின்றோம். எனது பாடசாலை நன்பர் வைத்தியர் பார்த்தீபன் அவர்கள் அபயம் அறக்கட்டளை ஊடாக சிவபூமியின் மருத்துவப் பணிகளுக்காக 24 இலட்சம் ரூபாவினை மாதாந்தம் அன்பளிப்பாக வழங்குகின்றார்.
ஆனைக்கோட்டை மயிலிட்டி, இயக்கச்சி, கண்டி ஆகிய இடங்களில் உள்ள எங்களது மருத்துவ நிலையங்கள் ஊடாக நடைபெறும் இலவச சேவைகளுக்காக எனது பாடசாலை நன்பர் இந்த உதவியை செய்கின்றார். கண்டியில் ஆசிரியர்களுக்கான உதவி, பிள்ளைகளுக்கான கல்வி உதவி என அனைத்திற்கும் எனது நண்பர் உதவு செய்கின்றார்.
இந்த செய்திகளை எல்லாம் நான் சொல்வதற்கு காரணம் எங்களுக்கு எப்படி பணம் வருகின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்குதான். சிலர் எவ்வித அடிப்படையும் இல்லாது மிகவும் தரக்குறைவாக இணையங்களில் பொய்களை பரப்புகின்றார்கள். திருமுருகனுக்கு எப்படி பணம் வருகின்றது?
ஏதோ கள்ள வழியில் வருகின்றது என மிகவும் தரக்குறைவாக எழுதுகின்றார்கள். பிழையான வழியில் ஒரு சதம் பணம் கூட எங்களுக்கு கிடையாது பிழையான வழியில் எங்களுக்கு கடவுள் உதவியும் செய்ய மாட்டார். நல்ல சிந்தனையுடன் எங்கள் பணிகளை பார்த்து பல பெரிய மனம் படைத்தவர்கள் எங்களுக்கு உதவி செய்கின்றார்கள் அவர்களின் உதவிகளைப் பெற்று நாங்கள் எங்கள் மண்ணிலே பணியாற்றுகின்றோம்.
புகழ்பெற்ற கணக்காய்வு நிறுவனத்தின் ஊடாக ஆண்டிற்கு நான்கு தடவைகள் எங்கள் நிதி நடவடிக்கைகளை கணக்காய்வு செய்து அதன் அறிக்கைகளை அரசாங்கத்திற்கு வழங்குகின்றோம். எங்கள் பணிகள் அனைத்தும் பல துன்பங்களை சுமந்து வாழ்கின்ற எங்கள் மக்களின் நன்மைக்காதான் என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் செஞ்சொற்செல்வர் குறிப்பிட்டுள்ளார்..