யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மின்மாற்றியில் பொருத்தப்பட்டிருந்த மின்மானி அலகு பெட்டி தீப்பற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பதற்ற நிலை நிலவியது.
இச்சம்பவம் யாழ் வடமராட்சி மந்திகை பகுதியில் இன்றைய தினம் (14-06-2023) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, தீப் பற்றியதை அவதானித்த அருகிலுள்ள வர்த்தகர்கள் விரைந்து என்று சுமார் 150 மீற்றர் தொலைவிலுள்ள மின்சார சபை அலுவலகத்தில் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து சென்ற இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மினசாரத்தை உடனடியாகவே துண்டத்து தீயே அணைத்தபின் மின்மானி அலகு பெட்டியை சீர்செய்து சுமார் நிமிடத்தில் மின்தடங்கலை சீர்செய்தனர்.