யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டுவரும் நிலையில் கொண்டுள்ள நிலையில் இன்றையதினம் (1)யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது மைத்திரிபால சிறிசேனவை வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி வரவேற்றார்.
தொடர்ந்து, வைத்தியசாலை செயற்பாடுகளையும் விடுதிகளையும் பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களோடு கலந்துரையாடினார்.
அதோடு சுகாதார அமைச்சராக தான் பதவியேற்ற காலத்தில் அடிக்கல் நடப்பட்டு ஜனாதிபதி காலத்தில் திறந்துவைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டட தொகுதியையும் பார்வையிட்டார்.
அதேவேளை இன்று சனிக்கிழமை காலையில் பிறந்த ஆண்குழந்தையொன்றை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆசீர்வதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழிற்கு வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி, நல்லூர் கந்தன் ஆலயம், மற்றும் யாழ் பொது நூலகம் என்பவற்றிற்கு சென்றதுடன், நேற்றையதினம் யாழ் நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்று மக்களோ மக்களாக அமர்ந்து சைவ உணவையும் ருசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.