யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தலில் வெற்றி பெற்று கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக நெவில்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளராக சிந்துஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சக போட்டியாளர்களையும் ஒன்றிணைத்து வெற்றிகரமான ஒன்றியமாக பயணிக்க வாழ்த்துக்கள் என ஜெயம் துவா என்ற ஊடகவியலாளர் ஒருவர் குறித்த தகவலை முகநூலில் பதிவிட்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

