கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடுடொன்றில் புகுந்த திருடர்கள் தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுன் பொறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த வீட்டார் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றுக்கு மறுநாள் காலை செல்வதற்காக இரவு வேளை தயார் படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்
இந்நிலையில் வீட்டில் இருந்த ஒருவர் குளியல் அறைக்கு சென்ற நேரம் கதவின் ஊடாக திருடன் வீட்டுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
28 பவுன் தங்க நகை களவு
மறுநாள் காலை வீட்டார் எழுந்து அறையை பார்வையிட்டபோது அலுமாரிகள் திறந்த நிலையில் வீட்டில் திருட்டு இடம்பெற்றதை உணர்ந்து தமது தங்க ஆபரணங்கள் இருந்த இடத்தை தேடி உள்ளனர்.
மறுநாள் நிகழ்வுக்கு எடுத்து வைத்த ஆபரணங்கள் அனைத்தும் களவாடி செல்லப்பட்டதை அறிந்த நிலையில் கோப்பாய் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மோப்ப நாய்கள் மற்றும் அருகில் உள்ள வீடுகளின் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

