யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 84 பேர் உட்பட வடக்கில் சுமார் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.பல்கலைகழகம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் நேற்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 130 பேருக்கு தொற்று உறுதியானது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 20 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 07 பேருக்கும், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும், யாழ். சிறைச்சாலையில் ஒருவருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும்,
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 06 பேருக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 07 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருவருக்கும், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 07 பேருக்கும்,
தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும், அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை,பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் ஒருவர்,பலாலி விமானப்படை முகாமில் ஒருவர், ஆனைவிழுந்தான்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 42 பேர் உட்பட 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.