யாழ்ப்பாணம் இளவாலை – சிறுவிளான் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு 20 பவுன் நகை திருட்டுபோயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் கொண்டாட்டம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில், அதில் கலந்துகொண்ட அதிகளவான ஆண்கள் மது விருந்தில் ஈடுபட்ட பின்னர் தூங்கிவிட்டனர்.
இதை பயன்படுத்திய வீட்டுக்குள் புகுந்த திருடன், நகைகளை திருடிச் சென்றுள்ளான். இதனையடுத்து காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் அனைத்தும் திறந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.
அத்துடன் நகை திருட்டு போன வீட்டில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் கைத்தொலைபேசி ஒன்றும் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.