யாழில் புல்லு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் புல்லு வெட்டியினை வாளாக உருமாற்றம் செய்து அதனை மறைத்து எடுத்து சென்ற இளைஞன் ஒருவர் , காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்லு வெட்டியின் கை பிடியினை மாற்றம் செய்து, புல்லு வெட்டியின் இரு பக்கங்களையும் கூர்மையாக்கி அதனை வாளாக இளைஞன் உருமாற்றம் செய்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

