யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று இருப்பதை கண்டு பாண் வாங்கியவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.