யாழ் உடுவில் பிரதேச செயலகத்திற்கு அருகில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்று இருந்த இளைஞன் மீதே இவ்வாறு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் இணுவில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த வாள்வெட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது