யாழ். பருத்தித்துறையில் உள்ள பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று முழுவதும் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த தீ விபத்து நேற்றையதினம் (20-03-2024) காலை பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ அருகில் உள்ள சிறிய கடை ஒன்றிற்குள் பரவியுள்ள நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், தீ விபத்தில் குறித்த கடை முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.