யாழ் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் இரவு (11-01-2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் வீட்டில் வசித்து வந்த நிலையில் குறித்த நபரின் மகன் இன்று வீட்டிற்கு வந்து வீட்டின் அறைக்குள் சென்றபோது தந்தை உருக்குலைந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் மகன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.