யாழில் பதுக்கி வைத்திருந்த பெற்றோல் ஆசிரியையின் உயிரைப் பறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்த ஓய்வுபெற்ற 41 வயதான பிரபாகரன் பிறேமலதா என்ற ஆசிரியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.