யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் சிக்கியுள்ளார்.
மானிப்பாய் சமுர்த்தி வங்கி ஒழுங்கை பகுதியில் ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருக்கும் நபர் தொடர்பான இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ஜஸ் போதைப் பொருள்
இதனையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்டு பொலிஸார் நடத்திய சோதனையில் 260 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் 2 பேர் கைதாகினர்.
சம்பவத்தில் 15 மற்றும் 25 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணகளை நடத்திவருகின்றனர்.