யாழ். வடமராட்சியில் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே கடந்த 30-10-2023ஆம் திகதி இரவு நெல்லியடி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சந்தேக நபரிடமிருந்து 5 தண்ணீர் மோட்டார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழில் பல இடங்களில் தொடர்ந்து தண்ணீர் மோட்டார் திருட்டுக்கள் இடம்பெற்று வந்தன.
அது தொடர்பில் பிரதேச காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருளை நுகர்வதற்காகவே குறித்த இளைஞன் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் திருட்டுக்களில் ஈடுபட்டதாக ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.