யாழ்ப்பாணம்- கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (6) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று, சிறப்பு அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்ட போது ஏற்பட்ட இழுபறியின் போது அதிரடிப்படையினரே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சம்பவத்தில் கையில் காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் அதிரடிப்படையினர் கைத்துப்பாக்கியால் சுட்டத்தில் சம்பவ இடத்திலிருந்த ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டது. அது பாரதூரமான காயமல்ல, ஒரு விரலில் காயமேற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய குற்றச்சாட்டில் பருத்தித்துறை முகாமைச் சேர்ந்த 5 விசேட அதிரடிப்படையினர், கொடிகாமம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது