யாழில் ஒன்றுவிட்ட சகோதரனால் கசிப்பு பருக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ் எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் வசிக்கும் சிறுவர்களே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் 4,7 வயதான இரண்டு சிறுவர்கள் மதுபோதையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தாயாரால் அனுமதிக்கப்பட்டனர்.
தாயாரின் சகோதரியின் மகனால் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாதிக்கபப்ட்ட இரண்டு சிறுவர்களும் அதிகமான போதையில் இருந்ததால், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேவேளை யாழ் மாட்டத்தில் சட்ட விரோத நடவடிக்கைல் பொலிஸார் களமிறங்கியுள்ள சிலையில் சிறுவர்களுக்கு கசிப்பு குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.