போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.மாநகர எல்லையில் வைத்து 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
யாழ்.நகரை அண்மித்த பகுதியில் வைத்தே குறித்த நபரை கைது செய்ததாகவும் , அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.