யாழ். வடமராட்சி பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் அதனை மக்கள் பலரும் அதிசயமாக பார்வையிட்டு வருகின்றனர்.
சமீப காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் உட்பட இவ்வாறான அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரையொதுங்கி வருகின்றது.
யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான படகொன்று கரையொதுங்கியுள்ளது.
மேலும், வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பௌத்த கொடியுடன் மிதப்பு ஒன்றும், மூடிய கொள்கலன் ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தது.
மறுபுறம் நாகர்கோவில் பகுதியிலும் மரத்தினாலான மிதப்பு ஒன்றும் அண்மையில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.