மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றிரவு (01-08-2022) இடம்பெற்றது.
மேலும் குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்தவர்களின் உதவி மூலம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.