யாழ்ப்பாண பகுதியில் ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பப் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் (25-07-2024) மானிப்பாய் கட்டுடை சந்தியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்றிரவு பொலிஸார் கைது செய்த நிலையில் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விபத்து தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளதுடன் அவர்களை நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

