யாழ்.மண்கும்பான் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தீவகத்திற்கான பிரதான போதைப் பொருள் விநியோகஸ்த்தர் குறித்த நபரே என பொலிஸார் கூறியுள்ளனர்.
20 வயதான குறித்த சந்தேகநபரிடமிருந்து சுமார் 35 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கைதான சந்தேகநபருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.