யாழ்ப்பாணம் நீர்வேலியில் உள்ள வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்கள் தங்க சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நீர்வேலி பகுதியில் உள்ள ஆசிரியர்களின் வீட்டினுள் நேற்று செவ்வாய்க்கிழமை(9) அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் தம்பதிகள் உறங்க்கிகொண்டிருந்த வேளை நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை கொள்ளையிடப்பட்ட வீட்டில் வசிக்கும் கணவன் மற்றும் மனைவி இருவரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.