நெல்லியடிப் பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டின் பாதுகாப்புக் கமராவுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அரச அதிகாரி நெல்லிஅடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதுடன், நாளை திங்கட்கிழமை (31) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

