யாழ். வடமராட்சி பகுதியில் கத்தி வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கரணவாய் மேற்கு, அந்திரான் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தே.பாலகுமார் (23) என்பவரே கத்தி வெட்டுக்கு இலக்காகியுள்ளார் நள்ளிரவு அவரின் வீட்டுக்கு தலைக்கவசம் அணிந்து சென்ற மூவர் வீட்டாரை அச்சுறுத்தி விட்டு சென்றுள்ளனர்.
அதன்பின்னர் மீண்டும் அதிகாலை வந்தவர்கள் கதவினை உடைத்து உள் நுழைந்து இளைஞரை வெட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.