யாழில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று புலம்பெயர் உறவுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.
நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து வாழும் நமது உறவுகள் தாய்நாட்டில் தமது இருப்பிடங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக, காணி வாங்கவென ஊரில் உள்ள தமது உறவுகளிடம் பெரும் தொகை பணத்தை அனுப்பி ஏமாந்த சம்பவங்கள் உள்ளன.
அந்தவகையில் அண்மையில் ஐரோப்பிய நாடொன்றில் வாழும் தனது சகோதரனின் 30 பரப்பு காணியை சொந்த சகோதரியே விற்று ஏப்பம் விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
பிரான்ஸ்சில் இருந்த சகோதரன் காணி வாங்கவென தனது உடன்பிறந்த சகோதரியிடம் காசை அனுப்பி, யாழின் பிரபலமான இடமொன்றில் 30 பரப்பு காணிவாங்கியுள்ளார்.
நீண்ட காலத்தின் பின்னர் விடுமுறைக்கு தாய் நாட்டுக்கு வந்த சகோதரன், தனது காணியை தேடிப்போக , அவரது காணி பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு விற்பனையாகியுள்ளதை அறிந்துள்ளார்.
சகோதரியை நம்பி அவர் அன்றோனிக் பவர் கொடுக்கபோக, அதுவில்லங்கத்தில் வந்து முடிந்துள்ளது. இந்நிலையில் சொந்த சகோதரியால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த, அந்த குடும்பஸ்தர் விபரீத முடிவெடுக்க துணிந்ததாகவும் அறிய கிடைக்கின்றது.
குறித்த குடும்பஸ்தர் 2000ம் ஆண்டளவில் பிராஸ் இற்கு சென்றவர் எனவும் , திருமணம் முடித்து அவருக்கு 2 குழந்தைகளும் உள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த நிலையில் வாயை கட்டி வயிற்றை கட்டி, வெய்யில் பனி பாராது, புலம் பெயர் நாட்டில் வேலை வேலை என உழைக்கும் நம் உறவுகளுக்கு இது ஓர் எச்சரிக்கை தகவலாக உள்ளது.