யாழ்.நாரந்தனை பகுதியில் தண்ணீர் விநியோக பவுசரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி தவறி கீழே விழுந்து பவுசரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் யசோதரன் ஜாக்சனா (வயது7) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
சிறுவர்கள் சிலர் தண்ணீர் பவுசரில் ஏறி விளையாடியபோது சிறுமி பவுசரில் இருந்து தவறி விழுந்து சக்கரத்திற்குள் சிக்கி நசியுண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.