யாழ். ஸ்ரான்லி வீதி கஸ்தூரியார் வீதி சந்திக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கூடிய பெருமளவு மக்களினால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
யாழ். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெருமளவானோர் பல மணி நேரமாக எரிபொருளுக்காக காத்திருந்த நிலையில், நேற்றை தினம் மாலை (21-06-2022) அரச ஊழியர்கள், அத்தியாவசிய சேவையாளர்கள் என சிலர் இடையில் புகுந்து எரிபொருள் நிரப்ப முற்பட்ட வேளை குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மின்சார நிலைய வீதி முதல் ஸ்ரான்லி வீதி வரையிலான கஸ்தூரியார் வீதி ஊடான போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சில மணி நேரங்களின் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.