யால சரணலாயத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் குறித்த வாகனங்களை மூன்று வருடங்களுக்கு இலங்கையில் உள்ள எந்தவொரு சரணலாயத்திற்குள்ளும் பிரவேசிக்க முடியாதவாறு கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் உத்தரவுக்கமைய வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திரா ஹேரத் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தீர்மானித்துள்ளார்.