வவுனியாவில் யானை தாக்கி முதியவர் ஒருவர் இன்றைய தினம் (04-08-2022) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, சேமமடு பகுதியில் வசிக்கும் 68 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டில் தேன் எடுப்பதற்காகச் சென்றுள்ளார்.
இதன்போது, காடு நோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வீதியின் குறுக்கே நின்ற யானை அவரை தாக்கியுள்ளது.
சம்பவ இடத்திலேயே முதியவர் மரணமடைந்துள்ளார்.
வீதியால் சென்றவர்கள் அதனை அவதானித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.