மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நிஷாந்த வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் நாளையதினம் (4) பதவியேற்க உள்ளார்.
அதேவேளை நிஷாந்த வீரசிங்க முன்னர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றியவராவார்.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாக இருந்த சுமித் அழககோன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய ஆணையாளராக நிஷாந்த வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது