மோட்டார் சைக்கிளும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கண்டி, மினிப்பே பிரதேசத்தில் (13) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பூஜாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய மேரி கனிஷ்டா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மேற்படி யுவதி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியில் எதிரே வந்த ஓட்டோ மோதியுள்ளது.
இந்தக் விபத்தில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.
ஓட்டோ சாரதியும், அதில் பயணித்த இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். என்று தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.