மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2100-ஐ தாண்டியுள்ளதாக று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தில் மொத்தம் 2122 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,370 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவு மொராக்கோவின் ஹை அட்லஸ் மலைகளை உலுக்கிய நிலநடுக்கம்தான் இந்த சேதத்திற்கு மிகப்பெரிய காரணம் என கூறப்படுகின்றது.
பெரும்பாலான உயிரிழப்புகள் தெற்கே உள்ள அல்-ஹவுஸ் மற்றும் டாரூடன்ட் மாகாணங்களில் உள்ள மலைப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, உடனடியாக 400 பேர் பலியானார்கள்.
தற்போது பலி எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 2,012 ஐ தாண்டி உள்ளது. இதையடுத்து அங்கு ராணுவத்தின் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது. மொரோக்காவில் நிலநடுக்கம் 03:41:01 (UTC+05:30) மணிக்கு 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் அளவு தெற்கில் உள்ள சிடி இஃப்னியிலிருந்து வடக்கிலும் அதற்கு அப்பாலும் உள்ள ரபாத் வரை ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் பேர் வரை தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு உள்ளதுடன் , கிட்டத்தட்ட 50 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மொராக்கோ வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்கள் இது ஒன்று என கூறப்படுகின்றது.