இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட யூரியா உரக் கப்பல் ஜூலை 10 அல்லது 11 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதேவேளை 65,000 மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிக்கொண்டு ஜூன் 28 ஆம் திகதி ஓமானில் இருந்து கப்பல் புறப்பட உள்ளது. அதற்கமைய, ஜூலை 15ஆம் திகதி முதல் விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.