ரி20 உலகக் கிண்ண முதல் சுற்றின் 3-வது ´லீக்´ ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெற்றது.
இதில் ´பி´ பிரிவில் உள்ள 2 முறை சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி, ஸ்காட்லாந்து அணியுடன் மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் சேர்த்தது.
இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது.
அந்த அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
இதன் மூலம் அந்த அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

