தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் நடிப்பில் தற்போது சாணி காயிதம், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் தமிழிலும், ரங் டே, Sarkaru Vaari Paata என தெலுங்கு திரைப்படங்களும் உருவாகி வருகிறது.
மேலும் மோகன்லால் நடிப்பில் உருவாகி, இந்திய சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் எதிர்பார்த்து காத்திருக்கும் மரைக்காயர் படத்திலும் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மேக்கப் இல்லாமல் இயற்கை அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர்.