மூன்று முறை திருமணம் செய்தும் குழந்தை இல்லாததால் கள்ளக்காதலியின் 13 வயது மகளை 4ஆவது திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபரை பொலிஸார் கைது செய்தனர். தமிழகத்தின் அரியலூரில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
பரமேஸ்வரிக்கு மூன்று மகள்கள் இருந்த நிலையில், அவர்களில் 13 வயது சிறிய மகளை அழைத்துச்சென்று கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதியன்று சிறுமிக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.
ராதாகிருஷ்ணனின் தாய் ருக்மணி, சிறுமியின் தாய் பரமேஸ்வரியும் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் திருமணம் நடந்த அன்றே ராதாகிருஷ்ணன் சிறுமியை வற்புறுத்தி உறவு கொண்டதால் சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் குறித்த நபரும், சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.