முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தருமான காமினி ஜயவிக்ரம பெரேரா உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காமினி ஜயவிக்ரம பெரேரா தனது 83 ஆம் வயதில் உயிரிழந்துள்ளதாக குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் நலம் விசாரிப்பதற்காக கடந்த (11) காலை கட்டுகம்பலையில் உள்ள அவரின் இல்லத்திற்குச் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.