புதிய வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது..
எனினும், கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் 47 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 5ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த 47 பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
.இதேவேளை , மதிப்பீட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் முதற்கட்டம் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 4ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.