முட்டை விலை அதிகரிக்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
முட்டை விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அதிகரித்த விலைக்கு முட்டையை விற்பனை செய்பவர்களை அடையாளம் காண்பதற்கான சுற்றி வளைப்புக்கள் தொடர்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.