முச்சக்கர வண்டி பதுளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 வயது சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பதுளை கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பிட்டிய மல் சந்தியில் இடம் பெற்றுள்ளது.
அச் சிறுமியின் தாய் உட்பட மூவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
சம்பவம் இடம் பெற்ற இடம்
கஹட்டரூப்பயில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் அம்பிட்டியவில் இருந்து முத்துமாலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் அம்பிடியமல் சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த முச்சக்கர வண்டியை ஓட்டி சென்ற பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
அத்தோடு மரணித்த சிறுமியின் தாயே முச்சக்கர வண்டியை ஓட்டி சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது.
விசாரணை
மரணித்த சிறுமியின் தாய் உட்பட மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மரணித்த சிறுமி முத்துமாலை கொவிபொல கெந்தகொல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு பேருந்தின் சாரதி கஹட்டரூப்ப பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டரூப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்