தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் வாங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) கூறுவது சிரிப்பாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து மனோ கணேசன் இன்று தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் மேலும் தெரிவித்தது, தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் வாங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய கூறுவதை கேட்டு சிரிப்பு வருகிறது.
மேலும், ஒரு உதாரணத்திற்கு, பங்களாதேஷிடம் கடன் வாங்கிவிட்டு, தற்போது திருப்பி செலுத்தும் காலத்தை கெஞ்சி நீடித்து விட்டு, கடனே வாங்கவில்லை என்கிறார்.
இதையும் நாம் ‘கடனே’ என கேட்டு தொலைக்க வேண்டியிருக்கிறது. இவரது அண்ணன் ராஜபக்ஷ கடன் வாங்கி, நாட்டுக்கு பிரியோசனமற்ற திட்டங்களில் போட்டு, நாசமாக்கினார்.
இந்நிலையில் அந்த பெருங்கடனைத்தான் இன்று முழு நாடும் வட்டி, குட்டி என இப்போ கட்டி தொலைத்து கொண்டிருக்கிறோம். இதில், நான் கடன் வாங்கவே இல்லை என வாக்கு மூலம் வேறு…!’ என அவர் பதிவிட்டுள்ளார்.