நாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின் விநியோகத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின் பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இந்த மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் எனவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேசிய மின் தொகுப்பில் 900 மெகாவாட் முழு கொள்ளளவை சேர்ப்பது மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, சில பகுதிகளில் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.