இலங்கையில் வரவுள்ள பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளலாம் என்பதால், இம்மாத நடுப்பகுதியில் இரண்டுவாரகால முடக்கமொன்றை அமுல்படுத்த அரசு ஆராய்ந்து வருகிறது.
இந்நிலையில், டிசெம்பர் 23 ஆம் திகதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை நாட்டை சுகாதார கட்டுப்பாடுகளுடன் முடக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே நாட்டில் ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு தீர்மானித்துள்ளது.