முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு தற்போது சிங்கப்பூரில் இருந்த கோட்டபாய ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் சவூதி அரேபியா சென்று இம்மாத இறுதி வரை அங்கு தங்கி அதன் பின்னர் நாட்டிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து தனது மகனின் பாதுகாப்பு கருதி அமெரிக்கா செல்லும் திட்டத்தையும் கைவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் “தனது அதிகபட்ச ஆற்றலுடன் சேவையாற்றியதைப் போன்று, தான் பிறந்த தாய்நாட்டிற்கு தனது சிறந்த பங்களிப்பை தொடர்ந்து வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்”.