நாடாளுமன்றத்தைக் கலைத்து மக்கள் ஆணையை அனுமதிப்போம் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி, நுகேகொட விஜேராம சந்தியில் இருந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் மக்கள் போராட்டங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியிருந்தனர்.
மக்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்களால் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறியதுடன் தனது பதவியையும் இராஜினாமா செய்திருந்தார்.
இதனையடுத்து நாட்டின் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க , படைகளின் ஊடாக போராட்டங்களை வெகுவாக கட்டுப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.