மாத்தளை – நாகொல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (09.01.2022) காலை இடம்பெற்றுள்ளது.
தீப்பெட்டி தயாரிக்கும் கைத்தொழிலில் ஈடுபட்டு வந்த குறித்த வீட்டில், பொதி செய்யும் பணியின் போது தீக்குச்சு ஒன்றில் தீ பரவியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீ பரவல் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. எனினும், வீட்டிலிருந்த பல உடமைகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
இந்த விபத்து தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

