மாணவர் ஒருவரைத் தலைக்கவசத்தால் தாக்கிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்வத்தை பொலிஸாரின் தகவலின்படி பாடசலையில் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பின்வத்தை மீகஹகோவில வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் தகராறில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவர் மீதே சந்தேகநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் சுமார் பத்து நாட்களாக பொலிஸாரின் தேடுதலிலிருந்து தப்பிக் கொள்ளும் நோக்கில் இவர்கள் தலைமறைவாக இருந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

