மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதன்படி, 1 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில், மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.